Wednesday, May 18, 2016

3 தொகுதிகளில் பாமக முன்னிலை

By With No comments:
3 தொகுதிகளில் பாமாகா முன்னிலை
11.30 மணி நிலவரப்படி நேரடி தேர்தல் முடிவுகள்.

கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன் வாக்களிப்பதை எட்டிப்பார்த்த எம்.எல்.ஏ. மீது வழக்கு

By With No comments:
கடந்த 16-ந் தேதி, கேரள சட்டசபை தேர்தல் நடந்தபோது, அம்பலப்புழா சட்டசபை தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் முன்னாள் முதல்-மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் வாக்களித்தார். அப்போது, அவர் வாக்களித்த மறைப்புக்கு அருகே அச்சுதானந்தனின் மகன் அருண் குமாரும், அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வும், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருமான ஜி.சுதாகரனும் நின்று கொண்டிருந்தனர்.
சுதாகரன், மறைப்பைத் தாண்டி, அச்சுதானந்தன் வாக்களிப்பதை எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுக்கூர், தேர்தல் கமிஷனில் புகார் செய்தார். அதை ஏற்று, மாநில தலைமை தேர்தல் அதிகாரி இ.கே.மஜி உத்தரவின்பேரில், சுதாகரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும் சுதாகரன் தெரிவித்தார்.

Heavy rain in Sri Lanka: Casualties announced

By With No comments:

Heavy rain in Sri Lanka: Casualties announced

Sri Lanka death toll rises after days of torrential rain

By With 1 comment:

Sri Lanka death toll rises after days of torrential rain

அ.தி.மு.க., வேட்பாளர்கள் 139 தொகுதிகளில் முன்னிலை: சென்னையில் தி.மு.க., முன்னிலை

By With No comments:


தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சுமார் 220 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகிறது.
10.30 மணி நேர நிலவரப்படி அதிமுக 139 தொகுதிகளிலும், திமுக 79 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
தேமுதிக மக்கள் நல கூட்டணி, வேட்பாளர்கள் 3 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் 2 இடங்களிலும் உள்ளனர்.
தேனி , திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
நெல்லை, மதுரை, கடலூர் மாவட்டங்களின் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக வேட்பாளார்களின் கையே ஓங்கி இருக்கிறது.
இதனிடையே, கன்னியாகுமரின் அனைத்து தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது. அதேபோல் சென்னையில் திமுக 4 இடங்களிலும் அதிமுக ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன. விழுப்பரம் மாவட்டத்தில் தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
காஞ்சிபுரத்தில் அதிமுக 4 இடத்திலும், திமுக ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

திமுக – காங்கிரஸ் கூட்டணி முன்னிலை… புதுவையில்!

By With No comments:
புதுவை: புதுவை சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. புதுவை சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்த 30 தொகுதிகளில் 344 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாநிலம் முழுவதும் உள்ள 930 வாக்குச்சாவடிகளில் இறுதி நிலவரத்தின்படி 84.08 சதவீதம் வாக்குகள் பதிவானது.
மொத்தம் உள்ள 9 லட்சத்து 41 ஆயிரத்து 395 வாக்காளர்களில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 511 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 68 ஆயிரம் பேரும், பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 22 ஆயிரம் பேரும் அடங்கும். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ‘வெப்’ கேமரா மூலம் கண்காணிப்பும் செய்யப்படுகிறது. இதுவரை அங்கு 9 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திமுக – காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், என்.ஆர்.காங்கிரஸ் 3 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதுதவிர, தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் தொகுதிகளில் 8 தொகுதிகளில் திமுக – காங்கிரஸ் கூட்டணியும், என்.ஆர்.காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இது தவிர சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் ஒரு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார்.

கன்னியாகுமரி தொகுதி 11 மணி நிலவரம்

By With No comments:
Tamil Nadu – Kanniyakumari
Counting In Progress
CandidatePartyVotes
AUSTIN. SDravida Munnetra Kazhagam6872
THALAVAI SUNDARAM. NAll India Anna Dravida Munnetra Kazhagam5301
MEENA DEV. MBharatiya Janata Party1230
AATHILINGA PERUMAL. DDesiya Murpokku Dravida Kazhagam502
SREETHARAN. RIndependent73
BALASUBRAMANIAM. VNaam Tamilar Katchi52
VETTIVELAYUTHAPERUMAL. PIndependent46
SANKARARAMAMURTHY. PBahujan Samaj Party38
HILMAN BRUCE EDWIN. SPattali Makkal Katchi37
KUMARESAN. TIndependent35
MAKESH. NIndependent18
RAGHUNATHAN. AIndependent16
JOHNSON. DIndependent16
BAVANI. VIndependent9
RAJESH KANNAN. SGandhiya Makkal Iyakkam6
None of the AboveNone of the Above102